kerala flood

கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், வெள்ளச்சரிவினாலும் 324 பேர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மிடுப்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நிறைய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

பல தரப்பு மக்கள் நிவாரண பொருட்கள், நிதி கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தருகின்றனர். தற்போது ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவும்இரண்டு கோடி நிதி முதலமைச்சர் நிவாரண நிதிக்குவழங்கியுள்ளது.