Advertisment

மாதம் நான்குமுறைக்கு மேல் பணமெடுத்தால் ஜி.எஸ்.டியுடன் கட்டணம் - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவிப்பு!

state bank of india

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, புதிய சேவை கட்டணங்கள் அமலுக்கு வரவுள்ளது. இவை ஏ.டி.எம்மில் பணமெடுப்பவர்களுக்கும், செக் புத்தகம் பயன்படுத்துபவர்களுக்குமானதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்கள், ஜூலை ஒன்றாம் தேதி முதல்ஏ.டி.எம்களிலும், வங்கிக்கிளைகளிலும்4 முறை மட்டுமே இலவசமாக பணமெடுக்கலாம். அதற்கு மேல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை பணமெடுக்கும்போதும், 15 ரூபாயும்அதனுடன் சேர்த்து ஜி.எஸ்.டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Advertisment

அதேபோல்அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பைவைத்திருப்பவர்கள் ஒரு நிதியாண்டில் 10 செக் தாள்களை கொண்ட புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.அதன்பிறகு 10தாள்களை கொண்டசெக் புத்தகம் பெற 40 ரூபாயும் அதனுடன் சேர்த்து ஜி.எஸ்.டியும் கட்டணமாக செலுத்த வேண்டும். 25 தாள்களை கொண்ட செக் புத்தகத்தை பெற 75 ரூபாயும் அதனுடன் சேர்த்து ஜி.எஸ்.டியும் செலுத்த வேண்டும்.

GST ATM state bank of india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe