ADVERTISEMENT

SBI வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க புதிய விதிமுறைகள்...

11:44 AM Sep 16, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவித்துள்ளது.

ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளிலிருந்து வாடிக்கையாளர்களைக் காப்பாற்றுவதற்காக அனைத்து வங்கிகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவித்துள்ளது. வங்கியின் இந்த அறிவிப்பின்படி, வரும் 18 ஆம் தேதி முதல் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கும்போது அவர்களது வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP ஒன்று வரும் எனவும், இதனைப் பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும் எனவும் வங்கி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த OTP நடைமுறை பின்பற்றப்படும் எனவும், மொபைல் எண்ணை வங்கி கணக்கோடு இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவு எட்டு மணி முதல் காலை எட்டு மணி வரை பணம் எடுக்கும்போது மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT