எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "44.51 கோடி வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயன்பெறுவர். வாடிக்கையாளர்களின் திருப்தியே வங்கியின் நோக்கம் என்ற அடிப்படையில் சலுகை" என்று தெரிவித்துள்ளார்.

முன்பு பெரு நகரங்களில் ரூபாய் 5,000, மற்ற பகுதிகளில் ரூபாய் 3,000 வரையிலும் குறைந்த பட்ச இருப்புத்தொகையை வங்கி கணக்கில் பராமரிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.