gfhfghfghf

Advertisment

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் வங்கியில் வாங்கியிருந்த கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்வதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. உயிரிழந்த 40 வீரர்களில் 23 பேர் எஸ்.பி.ஐ வங்கியில் கடன் வாங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் இதுபற்றி கூறுகையில், 'வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 23 வீரர்கள் எங்கள் வங்கியில் வாங்கியிருந்த கடனை தள்ளுபடி செய்கிறோம். மேலும் ஒவ்வொரு வீரரின் குடும்பத்திற்கும் காப்பீடு தொகையாக 30 லட்சம் வழங்கப்படும்' எனவும் அறிவித்துள்ளார்.