Advertisment

ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தக்கதில் சாவர்க்கர்; பாஜக அரசு உத்தரவு!

Savarkar's life is featured in a class 9 textbook in Uttar Pradesh

Advertisment

9 - 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 50 தலைவர்களைப் பற்றி அறியத் தனியாகப்பாடப்பிரிவைஉத்திர பிரதேசஅரசு சேர்த்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் படி 9 ஆம் வகுப்பு பாடத்தில்சாவர்க்கரின்வாழ்க்கைவரலாறு சேர்க்கப்பட்டுள்ளனது. மேலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள படங்களில் அப்துல்கலாம், பழங்குடியின போராளிபிர்சாமுண்ட உள்ளிட்ட தலைவர்கள், புரட்சியாளர்கள் என 50 பேரின் வாழ்க்கை வரலாற்றை அம்மாநில கல்வித்துறை சேர்த்துள்ளது.

அதன்படி, சந்திர சேகர் ஆசாத்,பிர்சாமுண்டா, பேகம்ஹஸ்ரத்மஹால், கவுதமபுத்தர்,ஜோதிபாபூலே மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறு 9 வகுப்பு படப்புத்தகத்திலும்,ரோஷன்சிங்,சுக்தேவ்,லோகமான்யதிலக், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, குதிராம்போஸ்உள்ளிட்டவர்களைப்பற்றி 10 ஆம் வகுப்பு படப்புத்தகத்திலும், டாக்டர் அம்பேத்கர்,பகத்சிங்உள்ளிட்டவர்களைப்பற்றி 11 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலும்,ரவீந்திரநாத்தாகூர்,குருநானக்தேவ்.சிவிஆகியோர் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனது. நடப்பு கல்வியாண்டான 2023 - 2024 ல் இருந்து மாணவர்கள்தலைவர்களைப்பற்றிப்படிப்பார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்மாணவர்களைக்கண்டிப்பாகத்தலைவர்கள் பற்றிய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், ஆனால் அந்த பாடப்பிரிவில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண், மதிப்பெண் பட்டியலில் இடம்பெறாது எனவும் அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

uttarpradesh savarkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe