Advertisment

சட்டப்பேரவையில் சவார்க்கர் படம் திறப்பு

பரக

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சவார்க்கர் தொடர்பான பேச்சுகள் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு சாரார் அவருக்கு ஆதரவாகவும், சிலர் கடுமையான எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சவார்க்கர் தொடர்பான கடுமையான கருத்துக்களை சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். சவார்க்கரை பார்த்து குழந்தைகள் வளர்ந்தால் கூட அவர்கள் கூட கோழைகளாகிவிட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே சவார்க்கர் யார் என்று குழந்தைகளுக்குக் கூட சொல்லிக்கொடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இவரின் இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்நாடக மாநில பாஜக அரசு சட்டப்பேரவையில் சவார்க்கர் படம் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இன்று அம்மாநில சட்டப்பேரவை மைய மண்டபத்தில் சவார்க்கர் படத்தைச் சபாநாயகர் ஹெக்டே காகேரி திறந்துவைத்தார். அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

assembly karnataka savarkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe