satyendar jain admitted in hospital

Advertisment

காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஆம் ஆத்மிகட்சியைச் சேர்ந்த டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் கரோனா பாதிப்பு கடந்த இருவாரகாலமாக அதிகரித்துவரும் சூழலில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் காய்ச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தென்பட்டதால், ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவருக்குத் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டிய அவசரக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.