Advertisment

ராமருக்கு உதவியது எந்த சாதியினர்..? கோவா ஆளுநர் பேச்சு...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது கோவா ஆளுநராக பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் கோவா மாநில ஆளுநராக பொறுப்பேற்ற சத்யபால் மாலிக், தெற்கு கோவாவின் பொண்டாவில் நடைபெற்ற இரண்டாவது பழங்குடி மாணவர் மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்றார்.

Advertisment

sathya pal malik about ram mandir

அப்போது பேசிய அவர், "அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவது தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. உயர் அந்தஸ்து வகிக்கும் மடாதிபதிகளும், துறவிகளும் கூறுவதை தினந்தோறும் இதுகுறித்து பேசுவதை கேட்க முடிகிறது. ராமர் கோவில் பற்றி அவர்கள் பேசும் போது, ராமரின் சிலைகள் மற்றும் ஆட்சியை பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால், சீதா தேவி, ராவண மன்னனால் கடத்தப்பட்ட போது, ராமரின் சகோதரர் அயோத்தியின் மன்னராக இருந்தார். ஆனால், ராமருக்கு உதவ ஒரு படை வீரர் கூட வரவில்லை.

மேலும், ராமர் இலங்கைக்கு நடைபயணமாகவே சென்ற போது, ஆதிவாசிகள், பழங்குடியின மக்கள் என தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்களே உதவினர். உயர் சாதியைச்சேர்ந்த யாராவது, ராமருக்கு உதவினார்கள் என்று என்னிடம் யாராவது விளக்க முடியுமா? எனவே, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மண்டபத்தில் ராமருக்கு உதவிய அனைவரையும் சித்தரிக்க வேண்டும் என்று முறைப்படி கடிதம் எழுத உள்ளேன்” என்றார்.

Goa Ram mandir
இதையும் படியுங்கள்
Subscribe