
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ம் தேதி விடுதலையானார். ஆனால் சசிகலா விடுதலையாவதற்குச் சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சிகிச்சை முடித்துக்கொண்டுபிப்ரவரி முதல் வாரத்தில் அவர்சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவின்உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ‘நான்காவது நாளாகஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசிக்கிறார்.உடலில்சர்க்கரை அளவு உள்ளிட்டவை சீராகஇயல்பானநிலையிலேயேஉள்ளது.’ என்று தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)