இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்த டிரம்ப் மற்றும் மெலனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அதன்பின் இரண்டாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் ட்ரம்ப் மற்றும் மெலனியா ஆகியோரை வரவேற்றனர். பின்னர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ட்ரம்ப் மற்றும் மெலனியா இருவரும் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment
Advertisment

பின்னர், தெற்கு டெல்லியில் உள்ள நானக்பூரா அரசுப் பள்ளிக்கு சென்ற மெலனியா அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளிக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் போது மெலனியா-வின் பின்னால் இருந்த சிறுவன் உற்சாக மிகுதியால் நடனம் ஆடினான். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகின்றது.