Sarita Nair not appearing so arrested

Advertisment

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சிக்கியவர் கேரளத்தைச் சேர்ந்த சரிதா நாயர். இவர் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி அவர் மீது பாலியல் புகார் அளித்தார்.

இவர் நிறுவனம் ஒன்றிற்கு சோலார் பேனல் பொருத்தி தருவதாகக் கூறி 42 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். தற்போது சோலார் பேனல் மோசடி வழக்கு கோழிக்கோடு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இவர் மீது கேரளா மட்டுமில்லாமல் கோவையிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த அப்தூல் மஜீத் என்பவர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் கடந்த மாதமே தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. ஆனால் சரிதா நாயர் ஆஜராகாத காரணத்தால் இன்று கைது செய்யப்பட்டார். அதேபோல் மேலும் சிலருக்கு வழங்கிய காசோலைகளும் பணமின்றி திரும்பி வந்ததாகக் கூறப்பட்டது.

Advertisment

சரிதா நாயர் ஆஜராகமலும், தொடர்ந்து பலமுறை விசாரணைக்கு செல்லாததாலும் அவருக்கு கோர்ட் கைது வாரண்டு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் விரைந்த கோழிக்கோடு மாவட்டம் கசபா காவல் நிலையப் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.