Advertisment

"இது மிகவும் தவறானது"... தீபிகா விவகாரத்தில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு...

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் 5ஆம் தேதி இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.

Advertisment

sanjay raut about deepika padukone's chhapaak movie issue

இதன் காரணமாக 10 ஆம் தேதி வெளியான அவரது "சப்பக்" படத்தை புறக்கணிக்க வேண்டும் என ஒரு சாரார் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் தீபிகா படுகோனிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தீபிகாவின் படத்தை புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தீபிகா படுகோனே மற்றும் அவரது படத்தை புறக்கணிக்க வேண்டும் என்பது தவறானது. நாட்டை ‘தலிபான்’ பாணியில் இயக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

Advertisment

chhapak deepika padukone sanjay ravut
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe