ADVERTISEMENT

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது உண்மையா..? பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள சிவசேனா...

03:07 PM Jan 03, 2020 | kirubahar@nakk…

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லை பகுதியில் உண்மையாகவே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதா? என சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா கேள்வியெழுப்பி உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீர் எல்லையில் காவலில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் நாயக் சாவந்த் சந்தீப் ரகுநாத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து மத்திய அரசை சாம்னா இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.

சாம்னா வெளியிட்டுள்ள கட்டுரையில், "2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று துல்லியத் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை ஒழித்ததாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன் கூட மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராணுவ வீரர் சாவந்த், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க முயன்றபோது துப்பாக்கிச்சூட்டில் பலியானார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 8 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் மறைவுக்கு மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாதி அரசு இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

மேலும், துல்லியத் தாக்குதல், 370-வது பிரிவு ரத்து ஆகியவற்றிற்கு பின் காஷ்மீரில் நிலைமை முன்னேறியுள்ளதாக மத்திய அரசு கூறி வருவதை கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வீரர்கள் மட்டுமே கொல்லப்படுகிறார்கள் என செய்தி பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல் மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு வருகிறது. 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலால் தீவிரவாதிகள் அடங்கிவிட்டார்கள் என்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. உண்மையில் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டதா எனும் கேள்வி எழுகிறது. ஏனென்றால், தீவிரவாதத் தாக்குதல்கள் இப்போது அதிகரித்துள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT