காங்கிரஸில் 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுச்செயலாளராக இருந்த தந்தை... தற்போது பாஜகவில் இணைந்த மகன்... காரணம் இதோ...!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பரப்புரை செய்துவருகின்றன. இப்படி டெல்லியில் அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதியின் மகன் சமிர் திவேதி நேற்று பாஜகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

sameer dwivedi joins bjp

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் கவரப்பட்டு பாஜகவில் இணைந்தேன் என்று கூறிய சமர் திவேதி, சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் முடிவுக்கு கொண்டுவந்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இதனை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இவரது தந்தை ஜனார்த்தன திவேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்பதும் கட்சியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பொதுச்செயலாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

congress modi
இதையும் படியுங்கள்
Subscribe