Advertisment

‘இந்து பண்டிகை சாலையில் கொண்டாடலாம், முஸ்லிம்கள் தொழுகக்கூடாதா?’ - எம்.எல்.ஏவின் பேச்சால் சர்ச்சை

Advertisment

samajwadi MLA’s speech sparks controversy wari Hindu festivals compared Muslims namaz

இந்து பண்டிகளை சாலையில் கொண்டாடுப்படும் போது முஸ்லிம்கள் சாலையில் தொழுகை செய்யக்கூடாதா? என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் ஒருவர் பேசியது தற்போது மகாராஷ்டிராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் அபு அசிம். இவர் மும்பை எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார். மாநிலத்தில் நடந்து வரும் வாரி பண்டிகை குறித்து கருத்து தெரிவித்த அபு அசிம், “பல இந்து பண்டிகைகள் சாலைகளில் கொண்டாடப்படுகின்றன. அதற்கு எந்த முஸ்லிம் நபரும் இந்து பண்டிகைகள் குறித்து புகார் அளிப்பதில்லை. ஆனால் ஒரு முஸ்லிம் சாலையில் பத்து நிமிடங்கள் தொழுகை செய்யும்போது புகார் அளிக்கப்படுகிறது. சாலையில் தொழுகை நடத்தினால், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்வதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிரட்டுகிறார். புனேவிலிருந்து புறப்படும்போது, ​​விரைவில் புறப்படுங்கள் இல்லையெனில் பால்கியின் இயக்கம் காரணமாக சாலைகள் மூடப்படும் என்று என்னிடம் சொன்னார்கள்” என்று கூறினார்.

Advertisment

மகாராஷ்டிராவில் பல நூற்றாண்டு காலமாக நடந்து வரும் பண்டர்பூர் வாரி யாத்திரையை, சாலைகளில் தொழுகை நடத்துவோடு அபி அசிம் ஒப்பிட்டு பேசியதால் மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்றும், அவர் பல கோயில்களைக் கட்டினார் என்றும் அவுரங்கசீப்பை அபு அசிம் புகழ்ந்து பேசியிருந்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், பண்டர்பூர் வாரி யாத்திரையோடு தொழுகை நடத்துவதை ஒப்பிட்டு பேசியதாகக் கூறி அவருக்கு பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அபு அசிமின் கருத்துகளுக்கு பதிலளித்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “விளம்பரம் பெறுவதற்காக அசிம் இது போன்ற கருத்துக்களைத் தெரிவிக்கிறார். நான் அவற்றில் கவனம் செலுத்த விரும்பவில்லை” என்று கூறினார். பட்னாவிஸுக்கு பதிலளித்த அபு அசிம், “நான் எந்த தவறான கருத்தும் சொல்லவில்லை. இந்து பண்டிகைகளை வரவேற்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இடப்பற்றாக்குறை காரணமாக முஸ்லிம் சாலைகளில் 10 நிமிடங்கள் தொழுகை நடத்தினால், கடும் கோபம் ஏற்படுகிறது” என்றார். இது குறித்து சிவசேனா எம்.பி நரேஷ் மாஸ்கே தெரிவிக்கையில், “இரண்டு சமூகங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த அசிம் இது போன்ற தேச விரோத கருத்துக்களைத் தெரிவிக்கிறார். இது போன்ற மக்களின் வாக்களிக்கும் உரிமையும், தேர்தலுக்காக நிற்கும் உரிமையும் பறிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறுகையில், “நம்முடைய மகா கும்பமேளா, வாரி போன்ற பண்டிகைகள் தொடங்கினால் உடனே அவர் அதை எதிர்ப்பார். எங்கள் வாரி பண்டிகை ஒரு வருடம் நீடிக்காது. ஆனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏராளமான மக்கள் தொழுகை நடத்துகிறார்கள். இதை நாங்கள் இங்கு பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் ஹஜ் யாத்திரை குறித்து கேள்வி எழுப்பினால், அது வேலை செய்யுமா?. யாரும் வாரி பண்டிகை குறித்து பேசத் துணியக்கூடாதி. எங்கள் வாரி இப்படியே தொடரும்” என்று கூறினார்.

Festival Maharashtra muslims abu azim namaz
இதையும் படியுங்கள்
Subscribe