நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ரம்ஜான் மாதத்தில் தேர்தல் நடைபெறுவதால் இஸ்லாமியர்கள் வாக்களிப்பதில் சிக்கல் உள்ளதாக சில இஸ்லாமிய இயக்கங்கள் கூறின.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/azam-khan-std.jpg)
இந்நிலையில் இது பற்றி கூறியுள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம்கான் கூறும்போது, "ரம்ஜான் மாதத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளாதது ஏன்? தங்களது சொந்த நாட்டிலேயே முஸ்லிம்கள் வாடகைதாரர்களாக கருதப்படுவது ஏன்? 1947 பிரிவினையின் போது பல முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து இந்தியாவில் குடியேறினர். இதைவிட அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம். தற்போது இந்தியாவில் முஸ்லிம்கள் ஒரு வாடகைதாரர்களாகவே பாவிக்கப்படுகிறார்கள்" என கூறினார்.
ஆசம்கானின் இந்தக் கருத்து வட இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது இந்த கருத்துக்களுக்கு இஸ்லாமியர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைதியாக வாழும் மக்களிடம் பழைய வரலாற்றை கிளறி ஆசம்கான் பலரது கோபத்திற்கு ஆளானார்.
இந்தக் குறிப்புகளை ஆசம்கான் இப்போது கூறுவது தேவையில்லாதது எனவும், சர்ச்சையைக் கிளப்பி அரசியல் லாபம் அடையவே ஆசம்கான் இதைப் பேசியிருப்பதாகவும் உ.பி. முஸ்லிம்கள் புகார் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)