Advertisment

வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு...

கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதற்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

Advertisment

ramgopalyadav

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் சர்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பாட்னா அருகே நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராம்கோபல் யாதவ் பேசிய போது, "துணை ராணுவப்படையினர் மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துணை ராணுவப்படையினர் என்னிடம் வருத்தப்பட்டு புகார் கூறினார்கள். அனைத்து வீரர்களையும் வழக்கம் போல விமானத்தில் அனுப்பி இருக்கலாம் என்று துணை ராணுவப்படையின் மூத்த அதிகாரிகள் என்னிடம் புகார் தெரிவித்தார்கள். ஜம்மு வரை விமானத்திலோ ஆழத்து குண்டு துளைக்காத வாகனத்திலோ சென்றிருக்கலாம். தாக்குதல் நடந்த அன்று ஜம்மு வரை எந்தவிதமான பாதுகாப்புச் சோதனையும் நடைபெறாமல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisment

எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி வீரர்கள் அனைவரும் முதல்முறையாக சாதாரண பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது. மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடன் இது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். இந்த விஷயத்தில் மிகப்பெரிய தலைவர்கள் சிக்கலாம் என கருதுகிறேன்" என்று ராம்கோபால் யாதவ் தெரிவித்தார். அவரின் இந்த கருது தற்போது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loksabha election2019 pulwama attack Samajwadi
இதையும் படியுங்கள்
Subscribe