Advertisment

மான்வேட்டை வழக்கில் சல்மான் கான் மனுவிற்கு நாளை தீர்ப்பு

1998-ஆம் ஆண்டு''ஹம் சாத் ஹெய்ன்'' என்ற திரைப்படத்திற்காக ஜோத்பூர் சென்றநடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடி கொன்றவழக்குகடந்த 20 வருடங்களாக நடந்து வருகிறது, இந்தனை வருடங்கள்கழித்து கடந்த ஞாயிற்று கிழமை ஜோத்பூர்நீதிமன்றம் 101 பக்க தீர்ப்பை வழங்கியது. அதில் அழியும் தருவாயில் இருக்கும் கலைமானை சுட்டது இயற்கை சமநிலையை பாதிக்கக்கூடியது, அதுமட்டுமின்றி தற்போது விலங்குவேட்டையாடல் பெரும் பதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகஇருந்துவருகிறது எனவும் வன பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறை தண்டனை விதித்தது.

Advertisment

salman

ஜோத்பூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு இன்று சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவானதுவிசாரணைக்கு வந்ததுஇதன் தீர்ப்பு நாளை( சனி கிழமை)வழங்கப்படும்என நீதிமன்றம் கூறியள்ளது.இதே மான் வேட்டை வழக்கில் 2017-ஆம் ஆண்டு மான் வேட்டைக்கு அவர் உரிமம் இல்லாத துப்பாக்கியை பயன்படுத்தினார் என்ற வழக்கில் மேல்முறையீடு செய்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும் இந்த வழக்கில் மான் வேட்டையின் போது உடனிருந்த நான்கு, நடிகர் மற்றும் நடிகைகள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது.

இதேபோல் சல்மான் கான் மான்வேட்டை வழக்கிற்கு பிறகு 2015-ல் நடைபாதைவாசி மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் தண்டனை பெற்று ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுவிக்கப்பட்டவர்.

இதேபோல பல சர்ச்சையில் சிக்கிவர் சல்மான் கான் 2106-ஆம் ஆண்டு தான் பாலியல் கொடுமை செய்யப்பட்ட பெண்ணைப்போல உணருகிறேன் எனவும் மது,புகை என எல்லா தீயபழக்கங்ககூட விட்டுவிடுவேன் ஆனால் பெண் துணையை விடமுடியாது எனவும் பேசி சர்ச்சையில் சிக்கியர்என்பது குறிப்பிடத்தக்கது.

actor arrest case cinema Salman Khan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe