ADVERTISEMENT

சம்பளம் உயர்வு - எம்.எல்.ஏ.க்கள் காட்டில் மழை

06:56 PM Sep 19, 2018 | rajavel


ADVERTISEMENT



குஜராத் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதற்கு சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தற்போது மாதாந்திர ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குஜராத் சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானம் ரூபாய் 45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்களின் தினசரி படி ரூ.200 லிருந்து ரூ.1000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி ரூ.70,727 ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது ரூ1,16,316 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.45,589 உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழக எம்எல்ஏக்களின் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT