Skip to main content

வங்கி இயக்குநர்கள், சி.இ.ஓ மற்றும் தலைவர்களுடன் 21-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் - ஆர்.பி.ஐ. ஆளுநர்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இடைக்கால பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

sakthi kantha das


 
இதில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், சமீபத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தின்போது வங்கிகளுக்கான கடன் வட்டிவிகிதம் 0.25% குறைக்கப்பட்டது. இந்த வட்டி விகிதம் குறைப்புப் பலன் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய வேண்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி வீதங்களைக் குறைப்பது குறித்து அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் இயக்குநர்கள், சி.இ.ஓ மற்றும் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளோம் என்றார். இந்தக் கூட்டம் பிப்ரவரி 21-ம் தேதி நடக்கவிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரப்பட வேண்டாம்” - ரிசர்வ் வங்கி கவர்னர்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

"No rush to change Rs 2000 notes says Reserve Bank Governor

 

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரப்பட வேண்டாம்  என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

இந்த நிலையில் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் இறுதிவரை புழக்கத்தில் இருக்கும். அதனால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். இன்னும் 4 மாதம் அவகாசம் உள்ளது. தினமும் எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுகிறது என்று வங்கிகள் ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறப்படுகிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் நோட்டுகளை மாற்றவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம். அதில் நோட்டுகளை மாற்ற வரும் மக்களுக்குக் காத்திருப்பதற்கான பந்தல்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார். 

 

 

Next Story

பெட்ரோல் விலை உயர்வு; வரியை குறையுங்கள் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

sakthikantha das

 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள், பெட்ரோல் மீதான வரியைக் குறித்து பெட்ரோல் - டீசல் விலையை சிறிதளவு குறைத்துள்ளனர். இருப்பினும் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நாணயக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் தொடர்பான குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகளின்படி பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அவற்றின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

நாணயக் கொள்கை குழு கூட்டத்தின் குறிப்புப்படி, "விலை உயா்வால் பொருளாதாரத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க, செயல்திறன் மிக்க விநியோகச் செயல்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியம்" என அவர் கூறியுள்ளார்.