இந்தியாவை சேர்ந்த முன்னணி பேட்மிட்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்.

Advertisment

saina nehwal joined bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஒலிம்பிக் மற்றும் கமென்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை பெற்றவர் சாய்னா. பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது திட்டங்களையும் அடிக்கடி பாராட்டி கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். கிரிக்கெட் வீரர் கம்பீர், ஹாக்கி வீரர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது சாய்னாவும் பாஜகவில் இணைந்துள்ளார். வரும் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் இவர் பாஜவுக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்த பின் பேசிய அவர், "நான் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளேன். நான் மிகவும் கடின உழைப்பாளி. அதேபோன்ற கடின உழைப்பாளர்களை நான் விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக இவ்வளவு செய்வதை என்னால் பார்க்க முடிகிறது. அவருடன் இணைந்து நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

Advertisment