Advertisment

பாரதியின் முண்டாசுக்கு காவி பூசிய பள்ளி கல்வித்துறை... சர்ச்சையும் விளக்கமும்....

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் படத்தில் உள்ள பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisment

saffron Swaddling clouts for bharathiyar

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மேம்படும் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் பாரதியின் தலைப்பாகை காவி வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

Advertisment

பாரதியார் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது வெள்ளை நிறை தலைப்பாகையும், முறுக்கு மீசையும், கருநிற உடையும் தான். அனால் அதுவே மாற்றப்பட்டு காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இதனிடையே தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான வளர்மதி இதுகுறித்து கூறுகையில், “ மாநில அரசால் வழங்கப்பட்ட பாடப்புத்தகமான இதில் அரசியல் மற்றும் மதம் போன்றவற்றிற்கு இடமில்லை. இது தவறுதலாக நடந்திருக்கும். மேலும் இது ஆராயப்பட்டு சரிசெய்யப்படும்” என தெரிவித்தார்.

schools barathiyar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe