Advertisment

6 வயது சிறுவன் படுகொலை:போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

sad of 6-year-old boy; Shocking police investigation

Advertisment

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆறு வயது சிறுவன் இளைஞர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் திருச்சூரில்வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவனை காணவில்லை என சிறுவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்தனர். தொடர்ந்து தேடியும் சிறுவன் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிறுவனின் உடல் அதே பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

Advertisment

sad of 6-year-old boy; Shocking police investigation

குளத்தை ஒட்டியுள்ள பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது இளைஞர் ஒருவர் சிறுவனை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. சிறுவன் ஓட ஓட இளைஞர் துரத்தும் அந்த காட்சிகள் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ய துரத்தியதாகவும் ஆனால் அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்ததால் குளத்தில் அழுத்தி கொலை செய்ததாகவும் பகிர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுவன் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட இந்த சம்பவம் கேரள மாநிலம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Child Care investigated Kerala police
இதையும் படியுங்கள்
Subscribe