சச்சின் பதிவிட்ட வீடியோ...அவுட்டா, இல்லையா குழப்பத்தில் வீரர்கள்...

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் தந்து ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பேட்ஸ்மேன் பந்தை மிஸ் செய்து பந்து ஸ்டம்ப்பில் பட்டு போவது போல் அந்த வீடியோவில் வருகிறது. அப்போது ஸ்டம்ப்பில் இருக்கும் பெய்ல் கீழே விழாமல் இன்னொரு ஸ்டம்ப்பில் பெய்ல் நிற்கிறது. இதை பார்த்த வீரர்கள் அவுட்டா, இல்லையானு குழப்பத்தில் இருந்தனர். ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்தார். இதனால் வீரர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்த வீடியோவை சச்சினுக்கு அவரது நண்பர் ஷேர் செய்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

cricket cricket players. Sachin Tendulkar twitter video
இதையும் படியுங்கள்
Subscribe