Skip to main content

நேற்று மத்திய பிரதேசம்... இன்று ராஜஸ்தான்..? தொடரும் பா.ஜ.க.-வின் ஸ்கெட்ச், திணறும் காங்கிரஸ் கட்சி!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

jh

 

மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆட்சியை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அம்மாநில பா.ஜ.க.-வினர் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. யார் முதல்வர்? எனும் போட்டியில் வெற்றிபெற்று அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. வெளியில் தெரியாமல் உள்கட்சி பூசலாக இருந்த வந்த இந்தப் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இது சச்சின் பைலட்டை கோபப்படுத்தியது. தனக்கு 30க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகத் தன்னுடைய வாட்அப் குழுவில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் பா.ஜ.க. ஈடுபடுவதாக அம்மாநில முதல்வர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். 

 

இதற்கிடையே தில்லி சென்ற சச்சின் பைலட் சோனியாவைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோனியாவைச் சந்திக்காமல் ராஜஸ்தான் திரும்பினார். கடும் அதிருப்பதியில் இருக்கும் அவர் இன்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்துப் பேச வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு நடைபெற்றால் பா.ஜ.க. தலைமையில் சச்சின் பைலைட் முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் தங்களுக்கு 109 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவும் இருக்கிறது என்றும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்பில்லை என்றும் அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் 200 சட்டமன்ற தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

சார்ந்த செய்திகள்