Advertisment

“பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் ஆசையும்”- சச்சின் பைலட்

கடந்த 9ஆம் தேதி உச்சநீதிமன்றம், அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதில், சர்ச்சைக்குறிய இடம் என்று கருதப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது. மேலும், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் இஸ்லாமியஅமைப்புகளுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Advertisment

Sachin pilot

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் வரவேற்கிறார்கள். அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றியின் மூலம் மக்கள் ஆதரவு மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும் சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இது எதிரொலிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Ayodhya sachinpilot
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe