sachin pilot meets ashok gehlot

Advertisment

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்திற்கு சச்சின் பைலட் வருகை.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் அம்மாநில ஆட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரை திங்கட்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார் சச்சின் பைலட். இந்தப் பேச்சுவார்த்தைச் சுமூகமாக நடைபெற்ற நிலையில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை ராஜஸ்தானில் சட்டமன்றம் கூட உள்ள சூழலில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் சட்டமன்ற குழுக் கூட்டம்நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் கெலாட் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். நாளை சட்டமன்றம் கூட உள்ள சூழலில் இன்றைய இந்தச் சந்திப்பு ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பங்கள் தீர்ந்துள்ளதை வெளிக்காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.