sabarimalai

சபரிமலை தீர்ப்பை அடுத்து நாளை கோவில் நடை திறக்கப்படுகிறது. இதில் பல பெண் ஐயப்ப பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பும் கடுமையாக உருவாகி இருக்கிறது. கேரளாவில் பல இடங்களில் பேரணி, போராட்டம். இன்று இதுகுறித்து தேவசம் போர்டில் அலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சுமுக தீர்வு காண முடியவில்லை என்பதால் பந்தள அரசு குடும்ப கூட்டத்தைவிட்டு வெளியேறியது. இவை அனைத்தையும் எதிர்த்து கேரள அரசு, நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று முழுமையாக செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.

Advertisment

இந்த தீர்ப்பை எதிர்த்து இன்று திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தில் பெண் ஒருவர் மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொள்ள போனார். உடனடியாக அருகிலிருந்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்னை காப்பாற்றி உள்ளனர்.

Advertisment