சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்கள் செல்ல அனுமதி உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய ஐயப்ப பகதர்கள் சேவா சங்கம் நேற்று மறு சீராய்வு மனு அளித்தது. தற்போது இந்த வழக்கை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, மனுவை உடனே விசாரிக்க தலைமை நீதிபதி முன் மனுதாரர் ஷைலஜா முறையீடு செய்தார். இதையடுத்து அக்டோபர் 17ம் தேதிக்கு முன் வழக்கு விசாரணை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.