sabarimalai

கடந்த வாரம் உச்சநீதி மன்றத்தில் சரிமலைக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கேரளாவில் பல்வேறு ஐயப்ப பக்தர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். இருந்தாலும் கேரள அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு எதுவும் தாக்கல் செய்யப்போவதில்லை என்றது. ஆனாலும் பல்வேறு கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் இதை எதிர்த்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், தேசிய ஐயப்ப பக்தர்கள் சம்மேளனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக என்று இம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.