சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பின்னர் சபரிமலையில் இந்த மாதம் நடை திறக்கப்பட்டபோது பலர் போராட்டங்களை நடத்தினர். சபரிமலைக்கு தரிசனம் செய்யலாம் என்று வந்த பெண்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இது இறுதியில் கலவரமானது, போலிஸார் தடியடி நடத்தியும் பெண்களை பாதுகாப்புடன் உள்ளே அழைத்து செல்ல முடியவில்லை.

Advertisment

இந்நிலையில், சபரிமலையில் கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த கலவரத்தில் போடப்பட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment