Advertisment

“பக்தர்கள் போல நக்சல்கள் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைகிறார்கள்”- பாஜக இணையமைச்சர் பரபரப்பு பேட்டி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூகைக்காக நேற்று முன் தினம் மாலை 5 மணி முதல் நடை திறக்கப்பட்டது.

Advertisment

muralidhar

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரை இளம் பெண்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் சட்ட ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

Advertisment

இதையடுத்து இளம் பெண்கள் சபரிமலை செல்வதை தடுக்க தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் தேவசம்போர்டை சேர்ந்த ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் முரளிதரன், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நகர்ப்புற நக்சல்களும் குழப்பவாதிகளும் செல்ல இருக்கிறார்கள். நாத்திகர்கள் என்றே எனக்கு தெரிகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் பக்தர்கள் தான் என்பதை ஆராய வேண்டும் என்றார்.

sabarimala Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe