Skip to main content

ஜீன்ஸில் ஐயப்பன் கோவிலுக்கு வந்த பெண்...இறக்கிவிட்ட பக்தர்கள்...

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
sab


சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்கள் உள்ளே செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று ஐப்பசி பூஜைக்காக அங்கு நடை திறக்கப்படுகிறது. இதனிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள வரும் பெண் பக்தர்களுக்கு எந்த தீங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கேரள காவல்துறை 1500 போலிஸார்களை பாதுகாப்பிற்காக சபரிமலையில் குவித்துள்ளது.
 

இந்நிலையில், பாதுகாபிற்காக வந்த பெண் போலிஸாரை தேவசம் போர்டு போலிஸார்கள் சபரிமலைக்குள் அனுமதிக்காததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பம்பையில் பெண் போலிஸாரையே அனுமதிக்க மறுத்துள்ளது, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
 

இதனிடையில், சபரிமலைக்கு செல்வதற்காக ஜீன்ஸ் பேண்ட்டுடன் வந்த லீனா என்ற பெண்ணை பத்தினம்திட்டா பேருந்திலிருந்து மற்ற ஐயப்ப பக்தர்கள் இறக்கிவிட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்