Skip to main content

”இதையும் மீறி என்னால் சபரிமலைக்கு போக முடியாது”-  பெண் பக்தரின் வருத்தம்...

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

 

உச்சநீதி மன்றம் உத்தரவையடுத்து பம்பையை கடந்து சபரிமலை ஏறிய 45 வயதான ஆந்திரா பெண் மாதவி, ஜயப்பா தா்ம சேனாவினரின் எதிர்ப்பால் பாதியிலேயே கீழே இறங்கினார்.
 

ஐப்பசி மாதம் பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை அதிகாலை ஐயப்பனை தரிசிக்க உச்சநீதி மன்றம் தீா்ப்பின் அடிப்படையில் அந்த குறி்ப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்வதை தடுக்கும் விதமாக கடந்த 11 நாட்களாக கேரளாவில் லட்சகணக்கான பெண்களும் இந்து அமைப்புகளும் பந்தளம் ராஜ குடும்பத்தினரும் போராடி வருகின்றனா்.
 

இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே போராட்ட காரா்கள் பத்தனம்திட்ட, நிலக்கல், பம்பையில் நின்று கொண்டு சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த குறிப்பிட்ட வயது உடைய பெண்கள் செல்கிறார்களா? என சோதனை செய்து வாகங்களை அனுமதிக்கிறார்கள்.
 

இதில் காலை 10.30 மணிக்கு சோ்த்தலையை சோ்ந்த லிஜி என்ற இளம் பெண் சபரிமலைக்கு செல்ல பத்தனம்திட்ட வந்தடைந்தார். பின்னர் அவரை பஸ்நிலையத்தில் வைத்து 50-க்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றனா். இதனால் போலிசார் தங்களின் பாதுகாப்பில் லிஜியை வைத்துள்ளனா். இது சம்மந்தமாக பத்தனம்தி்ட்ட போலிசார் 50 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா். 
 

இதற்கிடையில் ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சோ்ந்த 45 வயதான பெண் மாதவி தனது பெற்றோர் மற்றும் 10 வயது சிறுமியோடு பம்பை வந்தார். இதை பார்த்த போராட்டகாரா்கள் அந்த பெண்ணை போக விடாமல் தடுத்து சுற்றி நின்று சரண கோஷம் எழுப்பினார்கள் உடனே போலிசார் அந்த பெண்ணை கைகோர்த்து வளையத்துக்குள் கொண்டு வந்து பாதுகாப்பாக சபரிமலைக்கு அழைத்து செல்ல, பின்னர் கணபதி கோவில் தாண்டி மலை ஏறும் போது அங்கு நின்ற ஐயப்பா தா்ம சேனையினா் கோஷம் எழுப்பி தடுத்து நிறுத்தி இடையூறு செய்ததால் அந்த பெண், ”இதையும் மீறி என்னால் சபரிமலைக்கு போக முடியாது” என்று மலையில் இருந்து திரும்பி இறங்கி பம்பைக்கு வந்தார்.
 

இதே போல் பந்தளம் ராஜ குடும்பத்தினா் நாம ஜெபம் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். இதே போல் நிலக்கல்லில் போலிசரால் பிாித்து எறியபட்ட பந்தலை மீண்டு கட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சார்ந்த செய்திகள்

Next Story

சபரிமலை கோவில் நடை திறப்பு!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

kerala state sabarimala temple opening peoples

 

தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையை முன்னிட்டு, கேரளா மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் எனத் திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

 

நாளை (11/04/2021) வழக்கம்போல், காலை 05.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜை உள்ளிட்டவை நடைபெறும். நாளை (11/04/2021) ஏப்ரல் 18- ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 10,000 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா நெகட்டிவ் சான்றுடன் வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Next Story

சபரிமலையில் அணையா ஆழி தீ அணைந்தது... பக்தா்கள் அதிர்ச்சி!!!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

 

சபரிமலையில் சமீப காலமாக நடக்கக்கூடாத சில சம்பவங்கள் நடந்து வருவதாக கூறும் பக்தர்கள், கன்னட நடிகை ஜெயமாலா கோவில் கருவறைக்குள் சென்று ஐயப்பா சாமி விக்கிரகத்தை தொட்டு வணங்கினேன் என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை தொடா்ந்து அதனால் சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றபோது அதனை தடுத்து நிறுத்த பக்தா்கள் முயன்ற போது ஏற்பட்ட பல சம்பவங்கள் என சிலவற்றை கூறினர். 

 

தற்போது கரோனா பாதிப்பால் சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு விதிக்கபட்ட கட்டுப்பாடுகளில் பக்தா்கள் விரதம் இருந்து கொண்டு செல்லும் நெய்யை கொண்டு நெய் அபிஷேகம் செய்வது நிறுத்தப்பட்டது. மேலும் நாள் முமுக்க 24 மணி நேரமும் அணையா காட்சி தரும் ஆழி தீ அணைந்தது. இவை இரண்டும் சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு நடந்துள்ளது. இதனால் பக்தா்கள் மன வருத்தம் அடைந்தியிருப்பதுடன் தேவசம் போர்டும் அதிர்ச்சியடைந்துள்ளது.

 

இதுகுறித்து குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஐயப்பா குருசாமி சிதம்பரம் கூறும்போது, 40 ஆண்டுகளாக விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கிறேன். ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு குருசாமியாக இருந்து வழி நடத்தி சென்றியிருக்கிறேன். பக்தா் ஒருவா் விரதம் இருந்து தேங்காயில் நிரப்பும் நெய் அது வெறும் நெய் மட்டுமல்ல அந்த பக்தரின் கஷ்டம், துக்கம், நஷ்டம், நோய், வேதனை என எல்லாத்தையும் கலந்து தான் நிரப்புகிறான். அதை ஐயப்பா சாமியின் உடம்பில் ஊற்றி விட்டு கடைசியில் அதை சுமந்து சென்ற தேங்காயை ஆழி தீயில் இட்டு எறிவார்கள். 

 

இந்த ஆழி தீயை மண்டல மகர காலத்தில் நடை திறக்கும் அன்று கோவில் மேல் சாந்தி கற்பூரத்தால்  பற்ற வைப்பார். இந்த ஆழி தீ மண்டல மகர காலம் முடிந்து நடை அடைக்கும் அன்றைய நாள்  வரை அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும்.    

 

18-ம் படிக்கு கீழே இடது பக்கத்தில் காணப்படும் ஆழிக்கும் தனியாக ஆழி பூஜை நடத்தப்படும். இதனால்தான் சரணம் கோஷத்தில் கூட ஆழிக்குடையவனே என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் ஆழி தீ அணைந்து இருப்பது அதிர்ச்சியை மட்டுமல்ல வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆழி தீ அணைந்தது குறித்து தேவசம் போர்டு அதிகாரிகள் கூறும்போது, கரோனாவால் சில கட்டுபாடுகள் விதிக்கபட்டதால் பக்தா்களின் வருகை மிக மிக குறைந்ததால் ஆழி தீயில் தேங்காய் இல்லை இதனால்தான் ஆழி தீ அணைந்தது என்றனர்.