ayyapan-temple

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று காலையில்பத்திரிகையாளர் கவிதா, மற்றும் அவருடன் ஒரு பெண் பக்தர்சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வந்தனர். அவர்களை ஐ.ஜி.ஸ்ரீஜித் தலைமையிலான 50 காவலர்கள் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அளித்துபாதுகாப்புடன் அழைத்து சென்றனர். நடைப்பந்தல் அருகில் செல்லும்வரை எந்தவிதமான தடையும் ஏற்படவில்லை. இந்நிலையில் நடைபந்தலுக்கும், சன்னிதானத்திற்கும் 100மீட்டர்தான் இடைவெளிதான் இருக்கும். அவர்கள் நடைப்பந்தலை நெருங்கும்போது, உள்ளிருந்த பக்தர்கள் அவர்களை அனுமதிக்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஐ.ஜி. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் நானும் ஐயப்ப பக்தந்தான் உங்களை அடித்து காட்டுமிராண்டித்தனமாக அவர்களை அழைத்துசெல்ல விருப்பமில்லை. கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. அதை கடைபிடிப்பதுதான் எங்கள் வேலை எனக் கூறினார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஆனால் அதை மறுத்தனர் பக்தர்கள். அதைத்தொடர்ந்து டி.ஜி.பி. முகுலாவுடன் கலந்தாலோசித்தபின்மீண்டும் பேச்சுவார்த்தைநடந்தது. அப்போது அந்த பெண் பத்திரிகையாளருடன் வந்தவர் பக்தரல்ல என்பதும், சில நாட்களுக்குமுன் சமூக ஊடகங்களில்சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்என்பதும்தெரியவந்தது. இதனால் அவர்களை அனுமதிக்க மறுத்தனர். கேரள அரசும் அவர்களை திரும்ப அனுப்ப முடிவுசெய்து, அவர்களை திருப்பியனுப்பஉத்தரவிட்டது. இதற்கிடையில் அவர்களை அனுமதித்தால் சன்னிதியை மூடுவோம் என பந்தள மன்னர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">