sabarimala temples peoples devaswom board

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள மாநில அரசின் முடிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisment

அதன்படி, சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு 48 மணி நேரம் முன்பு பெற்ற ஆர்.டி-பி.சி.ஆர். கரோனா பரிசோதனை முடிவின் சான்றை அளிப்பதை உயர்நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. https://sabarimalaonline.org/ என்ற இணையதளத்தில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். இவ்வாறு தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Advertisment