கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
மண்டல பூஜைக்காக தற்பொழுது சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது. பூஜைகளுக்கு பிறகு 18 ஆம் படிக்கு கீழே உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படவுள்ளது. புதிய மேல்சாந்தி பதவியேற்றபின் 18 ஆம் படிக்கு கீழ் நிற்கும் பத்தர்கள் தரிசனம் செய்யஅனுமதிக்கபட உள்ளனர். பிற பூஜைகள் நடைபெறாது பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு கோவிலின் நடை இரவு 10 மணிக்கு சாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.