Advertisment
இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் சபரிமலையில் போலீசார் பாதுகாப்புடன் தரிசனம் செய்த நிலையில், சபரிமலை கோவில் நடை திடீரென்று அடைக்கப்பட்டது. அதன்பின் பரிகார பூஜைக்காக நடை அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஒரு மணி நேர பரிகார பூஜைக்கு பின்னர் சபரிமலை கோவில் சன்னிதானம் மீண்டும் திறக்கப்பட்டது.