“கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், தரிசனத்திற்கானடிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்கும். sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 1,000- லிருந்து 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 2,000- லிருந்து 3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது”எனசபரிமலை தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.