Sabarimala Makaravilakku Puja: Online Booking Starts!

Advertisment

உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக 'வெர்ச்சுவல் க்யூ' மூலம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

கேரளாவில் உள்ள பழமையான சபரிமலை ஐயப்பன் கோயிலில், இந்தாண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15- ஆம் தேதி அன்று மாலை நடைத் திறக்கப்படுகிறது. வரும் நவம்பர் 16- ஆம் தேதியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக, 'வெர்ச்சுவல் க்யூ' மூலம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

மண்டல பூஜை வரும் டிசம்பர் 27- ஆம் தேதியுடன் நிறைவடைந்து, கோயில் நடை அடைக்கப்படும். பின்னர், வரும் டிசம்பர் 30- ஆம் தேதி அன்று மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடைத் திறக்கப்பட்டு, 2023- ஆம் ஆண்டு ஜனவரி 20- ஆம் தேதி அன்று நடை அடைக்கப்படும்.

Advertisment

வரும் ஆண்டிற்கான மகரஜோதி தரிசனம், வரும் ஜனவரி 14- ஆம் தேதி பொன்னம்பல மேட்டில் நடைபெறும் என்றும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.