Sabarimala

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கோயிலுக்கு செல்வதற்காக பெண்கள் வந்து கொண்டுள்ளனர். இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவரும், அவருடன் பெண் பக்தர் ஒருவரும் சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். இவர்களுக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Advertisment

Sabarimala

இதற்கு எதிரப்பு தெரிவித்து சன்னிதானத்தில் பக்தர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கேரள ஐ.ஜி. ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினம் பக்தர்களின் போராட்டம் தொடர்ந்தது.

போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தையடுத்து, சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணை திருப்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்ட உணர்வை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.

Advertisment