Skip to main content

”மற்ற மத தலைவர்களின் உதவியுடன் சீறாய்வு மனு தாக்கல்” - சபரிமலை தேவஸ்தானம்

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
sabari malai


சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   
 

தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதி மல்ஹோத்ராவை தவிர 4 நீதிபதிகள் ஒருமித்து இந்த  தீர்ப்பை அளித்துள்ளனர்.  தீபக் மிஸ்ரா,  சந்திரசூட், கன்வில்கர், நரிமன் ஆகிய நீதிபதிகளைத்தவிர  நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். சபரிமலையில் அனைத்துப்பெண்களையும் அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.  உடல் மற்றும் உளவியல் ரீதியை காரணம் காட்டி பெண்களின் உரிமையை பறிக்கக்கூடாது.  ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்துகள்.  இதில் பாகுபாடு கூடாது.  தெய்வ வழிபாட்டில் பாரபட்சம் கூடாது.  வழிபாடு என்பது ஆண் - பெண் இருவருக்கும் சமமானது என்று கூறி   10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.
 

கேரளா மாநிலத்தில் உள்ள  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 48 நாட்கள்  விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்களுக்கு அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 
 

இந்நிலையில், வயது வித்தியாசமின்றி 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களையும் அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. ‘சபரிமலையில் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால், அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என தேவசம் போர்டு வழக்கறிஞ, ர் சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதற்கான காரணங்களை கூறி வாதிட்டார். இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.   10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது.   
 

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக, ”மற்ற மத தலைவர்களின் உதவியுடன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்” என்று திருவாங்கூர் தேவசம் அறக்கட்டளையின் தலைவர் பத்மகுமார் இந்த தீர்ப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்