Advertisment

ஆணுறுப்பை அறுத்துகொண்ட 28 வயது சாமியார்.... குற்றம் சாட்டியவர்கள் அதிர்ச்சி....

baba

Advertisment

பெண்ணின் மீது மோகம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார் ஒருவர், தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டுள்ளார்.

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த மாதனி பாபா என்ற சாமியார் ஒருவர் உள்ளார். 28வயது நிறம்பிய இவர், தனது வாழ்க்கையை திறந்து சாதுவாக மாறியுள்ளார். பின்னர், ஆசிரமங்கள், தனக்கென பக்தர்கள் என்று வாழ்ந்து வந்துள்ளார். இவர் தற்போது ஒரு ஆசிரமத்தை கட்ட இருக்கிறார். இதை எதிர்க்கும் கும்பல், இந்த சாமியார் மீது பாலியல் புகார் சுமத்தி இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த புகாரை அடுத்து, தன்னுடைய ஆணுறுப்பையே அறுத்துக் கொண்டுள்ளார் மாதனி பாபா. இந்த சாது இவ்வறு செய்துகொண்டதால் குற்றம்சாட்டியவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பம்னா மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

samiyar
இதையும் படியுங்கள்
Subscribe