மோடி புதினுக்கு அளித்த விருந்து...அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்குமா???

modi putin

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். இன்று நடைபெறும் இந்திய-ரஷ்யா இடையேயான 19வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் இருநாட்டு இராணுவத்தையும் வலுப்படுத்த பல ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

நேற்று டெல்லி வந்தடைந்த புதினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பின்னர், நரேந்திர மோடியை இரவு விருந்திற்காக சந்தித்தார்.

ரஷ்யாவிடம் இராணுவ ஆயுதங்கள் வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இருந்தாலும் இதைப்பற்றி ஆலோசிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

India Narendra Modi Russia viladimir putin
இதையும் படியுங்கள்
Subscribe