ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலி.... ஸ்டீல் விலை அதிகரிப்பு!

russia and ukraine issues steel price raised

ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக ஸ்டீல் விலை டன்னுக்கு 5,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்ததால் ஸ்டீல் விலை மேலும் அதிகரிக்கும் என்று தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஸ்டீல் உருவாக்கத்திற்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான நிலக்கரியில் 85% இறக்குமதியை நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதானமாகவும், தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்தும் நிலக்கரியை இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, வர்த்தக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, நிலக்கரி டன்னுக்கு 500 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்துள்ளது.

இதன் எதிரொலியாக, இந்தியாவிலும் சுருள்கம்பிகள் மற்றும் டிஎம்டி கம்பிகளின் விலையில் 20% அதிகரித்து, டன்னுக்கு 5,000 ரூபாய் விலை உயர்ந்துள்ளதாக, இத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்விளைவாக, சுருள்கம்பிகள் டன்னுக்கு 66,000 ரூபாய்க்கும், டிஎம்டி கம்பிகள் டன்னுக்கு 65,000 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

ஸ்டீல்கள் வாகன உற்பத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி மற்றும் கட்டுமானம் உள்ளிட்டத் துறைகளில் ஸ்டீல் பயன்படுத்தப்படுவதால் வீடுகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் உயரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

price
இதையும் படியுங்கள்
Subscribe