உச்சநீதிமன்றம்ஏற்கனவே அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நிலையில், இன்று கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ராகுல் காந்தி மீதான ஒரு வழக்கில் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

rti

அதன்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இனி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த தகவலறியும் உரிமை சட்டத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Advertisment