rahul gandhi

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அடுத்த மாதம் நடத்த போகும் விழா ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த விழாவில்இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடக்க உள்ளது. இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் குறித்தும் பொருளாதார சூழ்நிலை குறித்தும் இதில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

Advertisment

இதற்கு இந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு முறையின்படி அழைப்பு விடுக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது. இதைராகுல் காந்திஏற்பாரா என்று தெரியவில்லை.

கடந்த வாரம் ஜெர்மனிக்கு சுற்றுலா மேற்கொண்ட ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை கடுமையாக சாடி, பின்னர் தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் இந்த இயக்கத்தை ஒப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment