Advertisment

படேலுக்கு சிலையமைக்கும் போது ராமருக்கு கோவில் கட்ட முடியாதா? ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி

ram

சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்கும் போது ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்ட முடியாதா என ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி தத்தாத்ரேயா கேள்வி எழுப்பியுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நர்மதை நதிக்கரையில் படேல் இருப்பது போல், சரயு நதிக்கரையில் ராமர் இருப்பதில் என்ன தவறு எனவும், ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு உடனடியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் ராம ஜென்ம பூமியை இந்து மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.

Advertisment

Ram mandir sardhar vallabai patel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe