rss leader mohan bhagwat said India is not a selfish country

“உலகத்திற்கு ஒரு புதிய பாதையை இந்தியாதான் காண்பிக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

Advertisment

பஞ்சாப் மாநிலத்தில், நாம்தாரி சர்வதேச தலைமையகம் பைனி சாஹிப்பில், சத்குரு பர்தாப் சிங் மற்றும் மாதா பூபிந்தர் கவுர் ஆகியோரின் நினைவாகஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பேசிய அவர், “உலகில் சமநிலையை உருவாக்குவதே இந்தியாவின் வேலை. இந்தியா அதனை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது. இந்தியா ஒரு சுயநலம் கொண்ட நாடு அல்ல; அது அனைவரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறது” என்றார்.

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், “சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் சக்திகள் நாட்டை மட்டுமல்லாமல், உலகத்தையும் சேர்த்துச் சேதப்படுத்துகின்றன. மேலும், உலகத்திற்கே ஒரு புதிய பாதையை இந்தியா தான் காண்பிக்க வேண்டும். அதேசமயம் அதன் பாரம்பரியங்கள், கலாச்சாரம், பாரம்பரியத்தை விடாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எனவே, மதத்தின் பொருள் என்பது ஒன்றுபடுவதே தவிர, அது சிதைவதைப் பற்றிப் பேசவில்லை" எனப் பேசினார்.